அமேசான் சி.இ.ஓ ஜெஃப் பெசோஸ் பதவி விலகல்! புதிய சி.இ.ஓ யார் தெரியுமா?

spot_img

அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து பதவி விலகுவதாக Jeff Bezos அறிவித்துள்ளார்.

அமேசான் நிறுவனம் 1994-ல் ஒரு சிறிய ஒன்லைன் புத்தக விற்பனை செய்யும் இ-காமர்ஸ் நிறுவனமாக Jeff Bezos அவர்களால் அமெரிக்காவில் தொடங்கப்பட்டது.

இப்போது, சில்லறை விற்பனையில் உலகின் முன்னனி நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில், 26 வருடங்களுக்கு பிறகு அமேசான் நிறுவனர் Jeff Bezos தனது தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பிலிருந்து பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

அமேசானின் புதிய தயாரிப்புகள் மற்றும் அறிமுக முயற்சிகளில் கவனம் செலுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜெஃப் பெசோஸ் கூறியுள்ளார்.

அவர் 2021-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் பதவி விலகவுள்ள நிலையில், அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக Andy Jassy பதவியேற்கவுள்ளார்.

Andy Jassy 1997-ஆண்டு முதல் அமேசான் நிறுவனத்தில் பணியாற்றிவருகிறார். அவர் தற்போது Amazon Prime-ன் சி.இ.ஓவாக உள்ளார்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்

Loading RSS Feed