இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்தது

spot_img

ஐக்கிய அமெரிக்க டொலரின் நாணய மாற்று விகிதம், இந்த வாரம் வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

நேற்றைய தினம் (30) வெளியிடப்பட்டிருந்த மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின் பிரகாரம், ஐக்கிய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை ரூ. 185.20 ஆகவும், விற்பனை விலை ரூ. 190.02 ஆகவும் பதிவாகியிருந்தது.

கடந்த வாரம் நாணய மாற்று விகிதம், கடந்த ஏழு மாதங்களில் பதிவாகியிருந்த உயர்ந்த பெறுமதிகளைப் பதிவு செய்திருந்ததாகவும் மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டிருந்தது.

அதேவேளை, அமெரிக்க டொலர் மீதான ‘ஸ்பொட்’ பரிமாற்று பெறுமதி, நேற்றைய தினம் (30) ரூ. 187.96 ஆகக் காணப்பட்டதுடன், திங்கட்கிழமை (28) ரூ. 190.28 ஆகவும் பதிவாகியிருந்தது.

கடந்த வாரம் வெளிநாட்டு நாணய மாற்றுப் பெறுமதிகளில் காணப்பட்ட ஏற்றுத்தாழ்வுகளைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான முன்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி மேலும் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்

Loading RSS Feed