20 கோடி ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் உலகளவில் விற்பனை

spot_img

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் விற்பனையில் புது மைல்கல் கடந்துள்ளது. அதன்படி உலகம் முழுக்க இதுவரை 20 கோடி ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து இருப்பதாக அறிவித்து இருக்கிறது.

புதிய விற்பனை விவரத்தை ரெட்மி இந்தியா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் தெரிவித்தது. உலகம் முழுக்க ரெட்மி நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 20,00,00,000 யூனிட்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.

அதிக அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன் சீரிஸ் புதிய மைல்கல் கடந்துள்ளது. இந்த மைல்கல் உலகின் அதிகம் விரும்பப்படும் ஸ்மார்ட்போன் சீரிசாக ரெட்மி நோட் இருப்பதற்கு சான்றாக அமைந்துள்ளது என ரெட்மி இந்தியா தெரிவித்து இருக்கிறது.

கடந்த ஆண்டு பண்டிகை காலத்தில் சியோமி இந்தியா நிறுவனம் எம்ஐ 10டி ப்ரோ, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ், ரெட்மி நோட் 9 ப்ரோ, ரெட்மி 9, ரெட்மி 9 பிரைம், ரெட்மி 9ஏ மற்றும் பல்வேறு இதர மாடல்கள் என மொத்தம் 90 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்தது.

2020 ஆண்டு மட்டும் உலகம் முழுக்க சுமார் 14.5 கோடி ஸ்மார்ட்போன்களை சியோமி வினியோகம் செய்து இருக்கிறது. அதன்படி 2020 நான்காவது காலாண்டில் சியோமி ஸ்மார்ட்போன் வினியோகம் 31 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. சீனாவில் மட்டும் சியோமி வினியோகம் 46 சதவீதம் அதிகரித்து இருககிறது.

 

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்

Loading RSS Feed