‘தொழில் தொடங்க முனைவேரை ஊக்குவிப்போம்’

spot_img

இலங்கையில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் மக்கள் தொகையை எண்ணும்பொழுது, வேலைவாய்ப்பு என்பது மிகப்பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. பட்டதாரிகள் கூட வேலை வாய்ப்புக்காக பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும், பாமரர் முதல் பட்டதாரிகள் வரை அனைவருக்குமே வேலைவாய்ப்பை உருவாக்குவது ஓர் அரசாங்கத்தால் இயலாத செயலாகும்.

எனவே, சுய தொழில் செய்ய முயற்சி செய்வது அவசியம். அதாவது, சுய தொழில் தொடங்குவோர், தங்கள் தொழில் மூலம் மேலும் பலருக்கும் வேலைவாய்ப்பை வழங்க முடியும்.

அவ்வாறு தொழில் முனைய விருப்புவோரை எப்படி ஊக்குவிப்பது?

ஒரு புதிய தொழில் தொடங்கும் முன் அந்தத் தொழிலைத் தொடங்குவதற்கு ஏற்ற சுற்றுச்சூழல் உள்ளதா என்று ஆராய வேண்டும். இதை அமைத்துக் கொடுக்கவேண்டியது அரசு. ஆயினும், அனைத்து வசதிகளையும் அரசே செய்து கொடுக்க இயலாது. அரசால் செய்ய முடியாத விடையங்களை தொழில் முனைவோருக்குச் செய்து கொடுக்க சமூகம் முன்வர வேண்டும்.

அவர் அந்தத் தொழிலை தொடங்குவதற்கான விதிகள், வரயரைகள் என்னவென்று ஆராய வேண்டும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எளிமையாக எடுக்க வழிவகுக்க வேண்டும்.

தொழில் தொடங்கும் ஒருவருக்கும் இருக்கும் யோசனையை செயலாக்க அவர்களுக்கு நிதி உதவி/முதலீடு செய்துதர வேண்டும். அத்தோடு, தொழில் முனைவோருக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கிட, அவருக்கு ஏற்படும் குழப்பங்களைப் போக்கிட ஆலோசகர்கள், வழிகாட்டிகள் இருப்பது அவசியம்.

அந்தத் தொழிலுக்குத் தேவையான ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் மிக அவசியமான ஒன்று. தொழில் தொடர்பான கல்வி, கேள்வி அறிவும் மற்றும் அதற்கு தேவையான பயிற்சிகள், பயிற்சிக்குத் தேவையான காலம் மற்றும் அதற்குத் தேவைப்படும் வளங்கள் கிடைக்கப்பெறுவது.

மேலும் தொழிலைச் செய்யத் தேவையான மனிதவளம் மிகவும் முக்கியம். இவை அனைத்துக்கும் மேல், அவர் செய்யும் தொழில் யாருக்குப் பயன்படும் என்றறிதல் மிகவும் முக்கியம்.

சந்தை நிலவரங்கள், ஏற்கெனவே சந்தையில் அந்தத் தொழிலையோ அல்லது சார்ந்த தொழிலையோ செய்பவர்கள் எப்படிச் செய்கிறார்கள் என்ற நுணுக்கமான ஆராய்ச்சி.

இவை அனைத்தையும் அறிந்த பின்னர் ஒருவர் தொழில் தொடங்கள முன் வந்தால், அவர்க்கு தொழில் தொடங்குவதற்கான உதவித் தொகை கிடைக்க வழிவகுத்தல் அரசின் பொறுப்பாகும்.

மேலும் தொழில் தொடங்க ஏற்புடைய கொள்கைகளை உருவாக்குவது, மேலும் வரிச் சலுகைகள் அளிப்பது அரசின் கடமையே.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

Loading RSS Feed

செய்திகள்