சரித்திரம் படைத்தார் எலன் மொஸ்க்

spot_img

கடந்த காலங்களில் அனேகமானவர்களின் கனவு பில்கேட்ஸ் போன்று வரவேன்று என்பதாக இருந்தது.

இதற்கு காரணம் உலகின் முதலாவது பணக்காரர் எனும் இடத்தில் அவர் காணப்பட்டார்.

எனினும் அதன் பின்னர் அமேஷான் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான Jeff Bezos பில்கேட்ஸினை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்தார்.

இப்படியிருக்கையில் அண்மையில் இரண்டாம் இடத்திலிருந்த பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி எலன் மொஸ்க் இரண்டாவது இடத்தினை பிடித்திருந்தார்.

அதிலிருந்து சொற்ப காலத்திற்குள் முதலிடத்தினையும் தனதாக்க Jeff Bezos ஐ பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளார்.

டெஸ்லா எனப்படும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனத்தினையும், ஸ்பேஸ் எக்ஸ் எனும் தனியார் ரொக்கெட் ஏவும் நிறுவனத்தினையும் நடாத்தி வருகின்ற நிலையிலேயே இவ்வாறு முதலிடத்தினை தனதாக்கியுள்ளார் எலன் மொஸ்க்.

தற்போது எலன் மொஸ்க்கின் மொத்த சொத்து மதிப்பு 209 பில்லியன் டொலர்களாக காணப்படுகின்றது.

அத்துடன் 186 பில்லியன் டொலர்களுடன் Jeff Bezos இரண்டாம் இடத்திலும், 134 பில்லியன் டொலர்களுடன் பில்கேட்ஸ் மூன்றாம் இடத்திலும் காணப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்தி

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தமிழ் செய்தி Android Mobile App இனை, இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

முகப்புக்கு செல்ல

SEITHI.LK

விளையாட்டு

செய்திகள்

Loading RSS Feed